இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 24வது போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 8 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதற்கமைய, முதலில் துடுப்பாடிய சென்னை சுப்பர் கிங் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 226 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இந்தநிலையில், 227 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 218 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்துள்ளது.