வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் சடலம் நீதிமன்ற உத்தரவின் படி இன்று (வியாழக்கிழமை) இன்றைய தினம் தோண்டி எடுக்கப்படவுள்ளது.
முன்னதாக விசேட வைத்திய நிபுணர்கள் குழு, வர்த்தகர் தினேஸ் ஷாஃப்டரின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிய அவரது சடலத்தை தோண்டி எடுக்க வேண்டும் என நீதிமன்றில் கோரியிருந்தது.
குறித்த சமர்ப்பணத்தை ஆராய்ந்த கொழும்பு நீதிவான் நீதிமன்றம், அவரின் சடலத்தை தோண்டி எடுப்பதற்கு தேவையான பணிகளை முன்னெடுக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு அண்மையில் அறிவித்திருந்தார்.
இன்னிலையில் இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகளின் முன்னிலையில், வர்த்தகர் தினேஸ் ஷாஃப்டரின் சடலம் தோண்டி எடுக்கப்படவுள்ளது.
வர்த்தகர் தினேஸ் ஷாப்டர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தமது உயிரை மாய்த்துக்கொள்ள முற்பட்டாரா? என்பது தொடர்பில் இதுவரை உரிய தகவல்கள் வெளியாகாத நிலையில், அவரது மரணத்தில் தொடர்ந்தும் மர்மம் நீடிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.