எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படவுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அதன்படி நேற்று (புதன்கிழமை) நள்ளிரவு முதல் இந்த விலை மாற்றம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி 92 ஒக்டேன் பெட்ரோலின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 318 ரூபாவாகும்.
அத்துடன் 95 ஒக்டேன் பெட்ரோலின் விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 385 ரூபாவாகும்.
மேலும் சுப்பர் டீசலின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 340 ரூபாவாகும்.
மேலும் மண்ணெண்ணை விலை 50 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 245 ரூபாவாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.