உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்கு நிதியை, நிதி அமைச்சிடம் மீண்டும் கோரவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
திறைசேரி செயலாளருக்கு இந்த வாரத்தில் கடிதம் எழுதவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தேர்தல்கள் ஆணைக்குழு எந்த நேரத்திலும் தேர்தலுக்கு தயாராக இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
அதற்கு தேவையான பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருவதாகவும் உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி மற்றும் வாக்களிப்பு நிலைய வசதிகளை தயார்படுத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
எதிர்வரும் தேர்தலில் வேட்புமனுக்கள் இரத்து செய்யப்பட்டால் அதற்காக செலவிடப்படும் பணத்தில் குறிப்பிட்ட வீதம் வீணாகலாம் என்றும் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.