ருவாண்டாவிற்கு குடியேற்றவாசிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்பும் பிரிட்டனின் திட்டம் சட்டவிரோதமானது என பிரிட்டனின் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பிரிட்டனின் ருவாண்டா திட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் காரணமாக புகலிடக் கோரிக்கையாளர்கள் அவர்களின் சொந்த நாடுகளிற்கே திருப்பி அனுப்பப்படுவதில் ஆபத்துள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
எனவே ருவாண்டா திட்டத்தில் உள்ள குறைபாடுகள் திருத்தப்படும் வரை புகலிடக் கோரிக்கையாளர்களை ருவாண்டாவிற்கு அனுப்புவது சட்டவிரோதமானது எனவும் நீதிமன்றம் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.