மகாராஷ்டிரா மாநிலத்தில், இன்று அதிகாலை யாவத்மால் என்ற இடத்தில் இருந்து புனே நோக்கிப் பயணித்த பேருந்து ஒன்று, புல்தானா என்ற இடத்தில் வைத்துத் திடீரெனத் தீப்பிடித்து விபத்துக்குள்ளானது.
இவ் விபத்தில் குறித்த பேருந்தில் பயணித்த 32 பேரில் 25 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர் எனவும், 7 பேர் படுகாயமடைந்த நிலையில் புல்தானாவைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.