பிரித்தானியாவில் உள்ள டெவோனில் டோர்க்குவே பகுதியை சேர்ந்தவர் மோஸ்கிரீன். 33 வயதான இவர் இத்தாலியின் சிசிலி பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் ஆசிரியராகப் பணியாற்றி வந்துள்ளார். எனினும் அவருக்கு ஆசிரியராகப் பணியாற்றுவதில் மனநிறைவு ஏற்படவில்லை எனக் கூறப்படுகின்றது.
இந்நிலையில் குறித்த பகுதியில் உள்ள கடற்கரைக்கு அடிக்கடி சென்றுவரும் அவர் அங்கு, சில பெண்கள் கடல் கன்னிகளைப் போல் ‘மேஜிக்கல் மெர்மன்’ என்ற உடை அணிந்து புகைப்படம் எடுப்பதைக் கவனித்துள்ளார்.
இந்நிலையில் குறித்த பெண்களைப் போன்று தானும் கடற்கன்னியாக மாறுவதற்கு ஆசைப்பட்ட அவர் தனது ஆசிரியர் வேலையை உதறித்தள்ளிவிட்டு குறித்த கடற்கரையின் முழுநேர கடற்கன்னியாக மாறிவிட்டார். இதனையடுத்து குறித்த கடற்கரைக்கு வரும் மக்கள் அனைவரும் அவருடன் புகைப்படம் எடுத்துச் செல்வதாகவும் இது தனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து அவர் தனது இன்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் வாழ்ந்தால் போதும். நான் விரும்பும் ஒன்றை செய்கிறேன். அது தான் முக்கியம் எனக் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் அவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.