” நான் சரத் வீரசேகரவின் ஆள், உன்னை தூக்குவேன்” என தொலைபேசியில் ஒருவர் தன்னை மிரட்டியதாக யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் இளைஞன் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த முறைப்பாட்டில் ” எனது உறவினரிடம் வவுனியாவை சேர்ந்த நபரொருவர் 2 இலட்ச ரூபாய் பணத்தினைக் கடனாகப் பெற்ற பின்னர், அதனை மீள கையளிக்காது காலம் கடத்தி வந்தார்.
இதனால் இச்சம்பவம் தொடர்பில் எனது உறவினரை அழைத்துக் கொண்டு பொலிஸ் நிலையத்தில் இது குறித்து அந்நபருக்கு எதிராக முறைப்பாடு செய்தேன்.
எமது முறைப்பாட்டின் பிரகாரம் , பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து , பணத்தினை பெற்றவரை விசாரணைக்காக வருமாறு அழைத்திருந்தனர்.
இந்நிலையில் குறித்த நபர் என்னை தொலைபேசி ஊடாக அழைத்து , ” நான் சரத் வீரசேகராவில் ஆள், உன்னை தூக்குவேன் ” என மிரட்டினார்” என இளைஞன் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணப் பொலிஸார் முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.