லங்கா பிரீமியர் லீக் தொடரின் முதலாவது போட்டியில் கொழும்பு ஸ்டைக்கேர்ஸ் அணிக்கு ஓட்டங்கள் 174 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
லங்கா பிரீமியர் லீக்கின் ஆரம்ப போட்டி ரசிகர்களின் பெரும் எதிர்பபார்ப்புக்கு மத்தியில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக ஆரம்பமாகியது.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொழும்பு ஸ்டைக்கேர்ஸ் அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய லைக்காவின் ஜப்னா கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 173 ஓட்டங்களை பெற்றது.
அவ்வணி சார்பாக தவ்ஹீத் ஹ்ரிடோய் 54 வெல்லாலகே 25 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பந்து வீச்சில் கொழும்பு ஸ்டைக்கேர்ஸ் அணி சார்பாக நசீம் ஷா, மதீஷ பதிரன, சாமிக கருணாரத்ன மற்றும் சந்தகன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினார்.