லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரின் 14ஆவது லீக் போட்டியில், தம்புள்ளை அவுரா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில், காலி டைடன்ஸ் அணியும் தம்புள்ளை அவுரா அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்றுள்ள அணி, தம்புள்ளை அவுரா அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்துள்ளது.
இதன்படி முதலில் துடுபு;பெடுத்தாடிய காலி டைடன்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 133 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக தசுன் சானக 36 ஓட்டங்களையும் சாட் பவ்ஸ் 22 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
தம்புள்ளை அவுரா அணியின் பந்துவீச்சில், துஸான் ஹேமந்த 2 விக்கெட்டுகளையும் பினுர பெனார்டோ, ஹசன் அலி, தனஞ்சய டி சில்வா, ஹெய்டன் கெர் மற்றும் நூர் அஹமட், தனஞ்சய டி சில்வா ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 134 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய தம்புள்ளை அவுரா அணி, 17.4 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை கடந்தது. இதனால், தம்புள்ளை அவுரா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, அவிஷ்க பெணார்டோ ஆட்டமிழக்காது 70 ஓட்டங்களையும் சதீர சமரவிக்ரம 25 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
காலி டைடன்ஸ் அணியின் பந்துவீச்சில், லஹிரு குமார 2 விக்கெட்டுகளையும் சகிப் அல் ஹசன் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 49 பந்துகளில் தலா 3 சிக்ஸர்கள் மற்றும் பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 70 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட அவிஷ்க பெணார்டோ தெரிவுசெய்யப்பட்டார்.