இந்தியா முழுவதும் இன்று ”ரக்சாபந்தன்” கொண்டாட்டம் வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
உடன்பிறந்த மற்றும் உடன்பிறவாத சகோதர-சகோதரிகள் தமது சகோதர பாசத்தைப் பரிமாறிக் கொள்ள, ஆண்களின் கைகளில் ராக்கி எனப்படும் நூல் கட்டப்படும் பண்டிகையே ரக்சாபந்தன் என அழைக்கப்படுகின்றது.
ஆண்டுதோறும் ஆவணி மாதம் பௌர்ணமிநாளில் ரக்சா பந்தன் பண்டிகை கொண்டாடப்படுகின்றது.
இந்நாளில் சகோதரனின் மணிக்கட்டில் சகோதரி ராக்கி நூலினைக் கட்டி, அனைத்து நலன்களும் பெற்று சகோதரன் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என வாழ்த்துவார். ராக்கி அணிவிக்கும் சகோதரியின் வாழ்க்கையில் அனைத்து கஷ்டங்களிலும் துணை நின்று காப்பாற்றுவேன் என சகோதரன் வாக்குறுதி அளிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.