நீட் தேர்வினால் ஏற்படும் மரணங்களுக்கு மத்திய அரசே காரணம் என ‘இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்‘ உதயநிதி ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார்.
அண்மையில் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் நீட் தேர்வினால் மாணவர்கள் மாத்திரமன்றி அவர்களது குடும்பத்தினரும் உயிரிழக்கின்றனர்” எனவும் கவலை தெரிவித்துள்ளார்.
நீட் பரீட்சையை இரத்து செய்யுமாறு கோரி திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த இளைஞரணி, மாணவரணி மற்றும் மருத்துவர் அணியினர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.