திருகோணமலையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த தபால் சேவை ரயிலின் மீது தந்தையும், மகளும் பாய்ந்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் நேற்று (06) இரவு கந்தளாய் – பராக்கிர மாவத்தை பகுதியில் இடம்பெற்றுள்ளது. திருகோணமலை – கந்தளாய் புகையிரத நிலைய தண்டவாளத்தின் அருகே தந்தையும், மகளும் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்ததாகவும், ரயில் வந்ததும் தந்தையும், மகளும் ரயிலின் முன்னே பாய்ந்துள்ளனர் எனவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தில் 38 வயதான தந்தையும் ஆறு வயதான மகளுமே உயிரிழந்துள்ளனர் எனவும், குடும்பத்தகராறு காரணமாக கடிதம் ஒன்றினை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர் எனவும் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் உயிரிழந்த இருவரின் சடலமும் கந்தளாய் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.