உலகத் தலைவர்கள் பங்கேற்ற ஜி-20 உச்சி மாநாடு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில் இந்திய பங்கு வர்த்தகம் உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டுக்கான ஜி 20 மாநாடாடு கடந்த 9 மற்றும் 10 திகதிகளில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை காணப்பட்ட நிலையை விட இன்று நாட்டின் தேசிய பங்கு சந்தைகள் உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இதில் ரயில்வே, துறைமுகம் மற்றும் உட்கட்டமைப்பு உள்ளிட்டவற்றுடன் தொடர்புடைய நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டியுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.