ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர்-04 சுற்றின் 3ஆவது லீக் போட்டியில், பாகிஸ்தானை 228 ஓட்டங்களினால் வீழ்த்தி இந்தியக் கிரிக்கெட் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியக் கிரிக்கெட் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 02 விக்கெட்டுகள் இழப்புக்கு 356 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக விராட் கோஹ்லி ஆட்டமிழக்காது 122 ஓட்டங்களையும் கே.எல். ராகுல் ஆட்டமிழக்காது 111 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பந்துவீச்சில் ஷயின் ஷா அப்ரிடி மற்றும் சதாப் கான் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 357 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய பாகிஸ்தான் அணியால் 32 ஒவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 128 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால் இந்தியக் கிரிக்கெட் அணி 228 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, பகர் சமான் 27 ஓட்டங்களையும் அகா சல்மான் மற்றும் இப்தீகார் அஹமட் ஆகியோர் தலா 23 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளையும் பும்ரா, ஹர்திக் பாண்ட்யா மற்றும் சர்துல் தாகூர் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக 47ஆவது ஒருநாள் சதத்தை விளாசிய விராட் கோஹ்லி தெரிவுசெய்யப்பட்டார்.