தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 15 நாட்களுக்கு நிமிடத்திற்கு 5,000 கனஅடி தண்ணீர் திறந்துவிட உத்தரவிட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு காவிரி ஒழுங்காற்றுக்குழு அண்மையில் பரிந்துரை செய்தது.
எனினும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கர்நாடக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து ” கர்நாடக மாநிலத்தில் போதுமான மழை பெய்யாத காரணத்தால், தமிழ் நாட்டிற்கு தண்ணீர் திறக்கும் நிலையில் நாங்கள் இல்லை. நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் ஆரம்பிக்கும் முன்பு, இந்த விவகாரம் தொடர்பாக எங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது பற்றி திட்டமிட்டு வருகிறோம்” இவ்வாறு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.