சுகாதார அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளை பதவி விலகுமாறு கோரி சுகாதார அமைச்சுக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று (வியாழக்கிழமை) தொதொடர்கின்றது.
குறித்த போராட்டம் நேற்று ஆரம்பிக்கப்பட்ட நிலையிலும் இரண்டாவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகின்றது.
இந்த போராட்டத்தை ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான பிரஜைகள் அமைப்பு மற்றும் சில அரசியல் அமைப்புகள் ஒன்றிணைந்து இந்த சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்திருந்ததோடு சுகாதார அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் பதவி விலகும் வரை தாம் சத்தியாக்கிரகப் போராட்டத்தை கைவிடப்போவதில்லை எனவும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.