லிபியாவில் ஏற்பட்ட வெள்ளபெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆயிரத்தை கடந்துள்ளது.
குறித்த வெள்ளப் பெருக்கில் சிக்குண்டு உயிரிழந்தவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை டேனியல் சூறாவளி தாக்கியதை அடுத்து டெர்னாவில் இரண்டு நீர்த்தேக்கங்களும் நான்கு பாலங்களும் உடைக்கப்பட்டதை தொடர்ந்து, குறித்த பகுதியில் பாரிய வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
இதில், சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் எகிப்து உட்பட சில நாடுகள் லிபியாவிற்கு உதவிகளை செய்து வருகின்றன.
அத்துடன், ஐரோப்பிய ஒன்றியம் லிபியாவிற்கு 5 இலட்சம் ஐரோப்பிய யூரோக்களை நிதியுதவியாக வழங்கியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, இத்தாலி லிபியாவிற்கு பாதுகாப்பு படையினர் மற்றும் மீட்பு படையினரை தாங்கிய மூன்று கப்பல்களை அனுப்பியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.