16ஆவது ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சம்பியன் கிண்ணத்துக்கான இறுதிப் போட்டி, பல கோடி இரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆரம்பமாகியுள்ளது.
கொழும்பு- ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் ஆரம்பமாகியுள்ள இப்போட்டியில், மகுடத்திறக்hக இலங்கை மற்றும் இந்தியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை கிரிக்கெட் அணி, முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளரான மகேஷ் தீக்ஷன உபாதைக் காரணமாக இப்போட்டியில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக துஷான் ஹேமந்த அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார்.
இதன்படி இன்னமும் சற்று நேரத்தில் இலங்கை அணி, துடுப்பெடுத்தாட களமிறங்கவுள்ளது.