அக்கரைப்பற்று, ஸ்ரீ இராம கிருஷ்ணா தேசிய பாடசாலைக்கு ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசா அவர்களால் புதிய பஸ் வண்டி ஒன்று இன்று (28) வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
ஜக்கிய மக்கள் சக்தியின் ”பிரபஞ்சம்” எனும் வேலைத்திட்டத்தின் ஊடாக சுமார் 6 மில்லியன் ரூபாய் பெறுமதியான குறித்த பஸ் வண்டியானது வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
இதற்கான சாதகமாக செயற்பாடுகளை திருக்கோவில் வலயக்கல்வி பணிப்பாளர் திரு.ஆர் உதயகுமார் மற்றும் ஜக்கிய மக்கள் சக்தியின் பிராந்திய இணைப்பாளர் வெ.வினோகாந்த் ஆகியோர் முன்னெடுத்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.