நாட்டில் பெய்துவரும் கடும் மழை காரணமாக பல ஆறுகளின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதுடன் சில பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இந்நிலையில் ” தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், நாட்டின் தென்மேற்குப் பகுதியில் நிலவும் மழை நிலைமை தொடரலாம் எனவும், குறிப்பாக மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கும் கடும் மழை பெய்யும் எனவும் இதனால் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன் மேல் மற்றும் சபகரமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.