பல விதமான உணவு வகைகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் அதிகரிக்க அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளனர்.
நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது, சங்கத்தின் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை பிளேன் டீ விலை 5 ரூபாவினாலும் பால் தேனீர் விலை 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளது.
மேலும் சாப்பாட்டு பொதி ஒன்றின் விலை 20 ரூபாவினாலும், கொத்து மற்றும் ஃப்ரைட் ரைஸ் விலை 20 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.