டெஸ்ட் போட்டிகளை தொடர்ந்து ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அவுஸ்ரேலிய அணையின் நட்சத்திர இடது கை துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்னர் அறிவித்துள்ளார்.
டேவிட் வோர்னரின் ஆட்டம் குறித்து சமீப காலமாக விமர்சனம் செய்யப்பட்டு வந்த நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான தொடர் முடிவடைந்ததும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இந்நிலையில் சிட்னியில் எதிர்வரும் 3 ஆம் திகதி தொடங்கும் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டிதான் அவரது இறுதி போட்டி என அறிவித்திருந்தார்.
இந்நிலையில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள டேவிட் வோர்னர் இருபதுக்கு 20 கிரிக்கெட்டில் தொடர்ந்தும் விளையாடுவதாக தெரிவித்துள்ளார்.