மலையகத்திலும் இன்று பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இன்று காலை 6:34 மணிக்கு அமைந்திருந்த சூரிய உதய காலத்தில் ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் பொங்கல் இட்டு சூரியனுக்கு படைத்து நன்றி தெரிவித்து பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.
அதனை தொடர்ந்து ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையாருக்கு அர்ச்சனை நடைபெற்றது. நிகழ்வுகளில் கோவில் அறங்காவல் சபையினர் உட்பட பொதுமக்களும் கலந்துக் கொண்டு வழிபாடுகளில் ஈடுப்பட்டனர்.