இலங்கை மற்றும் சிம்பாவே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டி இன்னும் சற்றுநேரத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சிம்பாவே அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்துள்ள நிலையில் இலங்கை அணி துடுப்பெடுத்தாடவுள்ளது.
இன்றைய போட்டியில் மேலும் 5 விக்கெட்களை கைப்பற்றினால் ங்காரா சிம்பாவே அணி சார்பாக இருபதுக்கு இருபது போட்டியில் அதிக விக்கெட்களை வீழ்த்திய வீரர் என்ற பெருமையை பெற்றுக்கொள்வார்.
இலங்கை அணியில் பதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், குசல் ஜனித் பெரேரா, சதீர சமரவிக்ரம, சரித் அசலங்க, ஏஞ்சலோ மத்தியூஸ், தசுன் ஷனக, வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷன, துஷ்மந்த சமீர, டில்ஷான் மதுஷங்க ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.