நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட சோதனை நடவடிக்கையின் கீழ் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 12.30 உடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 667 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
அவர்களில் போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 559 பேரும், குற்றப்பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ள பட்டியலில் உள்ள 108 பேரும் அடங்குவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது
இந்த சுற்றிவளைப்புகளின் போது 191 கிராம் ஹெரோயின், கஞ்சா மற்றும் ஐஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.