நாட்டில் முட்டையொன்றின் விலை மீண்டும் உயர்வடைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய கடந்த சில வாரங்களுக்கு முன்னர் 40 ரூபாயாக குறைக்கப்பட்ட முட்டை ஒன்றின் விலை தற்போது, விலை 58 ரூபாவாக உயர்வடைந்துள்ளது
கோழிப்பண்ணை உரிமையாளர்களே முட்டை விலையை இவ்வாறு உயர்த்தியுள்ளதாக முட்டை வியாபாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதனால், தங்களுக்கும் முட்டைகளின் விலையை உயர்த்தி விற்பனை செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும், இடைத்தரகர்கள் குழுவொன்றே முட்டையின் விலையை அதிகரித்துள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளதுடன் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.