இலங்கை கிரிக்கெட் அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி 267 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
கண்டி- பல்லேகலே மைதானத்தில் தற்போது நடைபெற்றுவரும் இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி, 48.2 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 266 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ரஹமட் ஷா 65 ஓட்டங்களையும் அஸ்மதுல்லா ஒமர்ஸாய் 54 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், பிரமோத் மதுஷான் 3 விக்கெட்டுகளையும் துனித் வெல்லாலகே, அசித்த பெனார்டோ மற்றும் அகில தனஞ்சய ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து, 267 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி இலங்கை கிரிக்கெட் அணி, இன்னமும் சற்று நேரத்தில் துடுப்பெடுத்தாடவுள்ளது.