ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில், இலங்கை கிரிக்கெட் அணியின் பெத்தும் நிஸங்க சதம் விளாசியுள்ளார்.
13 பவுண்ரிகள்; மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்களாக, 89 பந்துகளை எதிர்கொண்ட பெத்தும் நிஸங்க, தனது 5ஆவது சதத்தை பதிவுசெய்தார்.
கண்டி- பல்லேகலே மைதானத்தில் தற்போது நடைபெற்றுவரும் இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி, 48.2 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 266 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதனைத்தொடர்ந்து தற்போது பதிலுக்கு இலங்கை கிரிக்கெட் அணி 267 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடி வருகின்றது.