”அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படும்” என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஒரு மாத காலத்திற்கு விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதற்கு எதிர்பார்த்து இருப்பதாகவும், இரண்டாம் கட்டத்தின் கீழ் சுமார் 4 இலட்சம் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.