புதிய மின்சார இணைப்பினைப் பெற முயற்சி செய்பவர்களின் நலன் கருதி இலங்கை மின்சார சபை புதிய அறிவிப்பொன்றினை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய புதிய மின்சார இணைப்பினைப் பெற முயற்சி செய்பவர்கள் தாம் செலுத்த வேண்டிய கட்டணத் தொகையில் 25% சதவீதத்தை முற்பணமாக செலுத்த வேண்டும் எனவும், மீதியை தவணை முறைகளில் செலுத்த முடியும் எனவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.