“பா.ஜ.க வுக்கும் , தனக்கும் கிடைத்த ஆதரவை பார்த்து திமுகவிற்கு தூக்கமே தொலைந்து விட்டது” என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்திற்கு வருகை தந்துள்ள பிரதமர் மோடி சேலம் – நாமக்கல் கெஜல்நாயக்கன்பட்டியில் இடம்பெற்ற பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”தமிழகத்தில் பா.ஜ.க வுக்கும் மோடிக்கும் கிடைத்த வரவேற்பு நாடே பார்த்தது. நான் நேற்று மக்கள் வெள்ளத்தில் நீந்தினேன். பா.ஜ.க வுக்கும் , மோடிக்கு கிடைத்த ஆதரவை பார்த்து திமுகவிற்கு தூக்கமே தொலைந்து விட்டது.
அத்துடன் நேற்று பா.ம.க சேர்ந்துள்ளதால். ராமதாஸின் அனுபவ அறிவும் , அன்புமணியின் திறமையும் தமிழகத்தை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல உதவும்” இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.