தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க கனடாவிற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில் அநுர குமார திசாநாயக்கவுக்கு டொரன்டோ விமான நிலையத்தில் கனடாவாழ் இலங்கையர்களால் அமோக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் டொரன்டோ மற்றும் வான்கூவர் ஆகிய இரு பிரதான நகரங்களில் நாளை மற்றும் நாளை மறுதினம் நடைபெறவுள்ள இலங்கையர்களுடனான சந்திப்புக்களில் பங்கேற்பதற்காக அநுரகுமார திஸாநாயக்க கனடா சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.