வவுனியாவில் ஆசிரியர் தாக்கியதில் 2 ஆம் தரத்தில் கல்வி கற்கும் சிறுவனொருவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது.
சுந்தரபுரம் பகுதியில் உள்ள பாடசாலையொன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சிறுவனுக்கு உயிர் எழுத்துக்கள் தெரியாத காரணத்தினால் அவரை ஆசிரியர் தாக்கியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் ஆசிரியர் தாக்கியதில் சிறுவனின் நெற்றியில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், தலை மற்றும் கண் பாதிப்படைந்துள்ளதாகவும் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக வைத்தியசாலை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் சட்ட வைத்திய அதிகாரியின் விசாரனைக்கும் உட்படுத்தபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.