நீதிமன்ற உத்தரவை செயற்படுத்துவதற்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் உலப்பன சுமங்கல தேரர் உள்ளிட்ட இருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நீதிமன்ற உத்தரவின் பேரில் குடிசை வீடுகளை அகற்றுவதற்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலப்பன சுமங்கல தேரர் உள்ளிட்ட இருவர் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரேசேன முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது மன்றில் முன்வைக்கப்பட்ட காரணிகளை பரிசீலித்த நீதவான் சந்தேக நபர்களை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் நாரஹேன்பிட்டி தாபரே மாவத்தையில் உள்ள பல குடிசை வீடுகளை அகற்றுவதற்கு இடையூறு விளைவித்ததாக சுமங்கல தேரர் உள்ளிட்டவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.