ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பதில் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி அமைச்சரின் பெயர் மற்றும் கட்சியின் செயற்குழுவில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பதில் பொதுச் செயலாளர் துஷ்மத்த மித்ரபால தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கவுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு கூட்டம் நேற்று இடம்பெற்றிருந்த நிலையில் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ கட்சியின் பதில் தலைவராக ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.