ஓய்வு பெற்ற இலங்கையின் இராணுவ அதிகாரிகளை கூலிப்படைகளாக பயன்பத்தும் நோக்கில் ஆள் கடத்தலில் ஈடுபட்ட சிரேஷ்ட இராணுவ அதிகாரி உட்பட மேலும் சில சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இதேவேளை ரஷ்ய – உக்ரைன் மோதலில் இலங்கையின் ஓய்வு பெற்ற 16 இராணுவத்தினர் உயிரிழந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.