நைஜீரியாவின் வட, மத்திய பகுதியில் ஆயுதமேந்திய குழு ஒன்று நடத்திய துப்பாக்கி சூட்டில் 40 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயம் அடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, துப்பாக்கிச்சூடு நடத்திய ஆயுதகும்பல் அங்கிருந்து தப்பி சென்றதுள்ளதாகவும் தகவல் அறிந்து அங்குச் சென்ற பொலிஸார் காயம் அடைந்தவர்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
எனினும், இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை எனவும் இந்த பிராந்தியத்தில் நாடோடி மற்றும் கிராம விவசாயிகளுக்கு இடையே நீர், நிலம் தொடர்பாக பிரச்சனை இருந்து வருவதால் இருதரப்புக்கு மோதல் ஏற்பட்டு வன்முறை சம்பவங்களும் நடத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் இதுபோன்ற தாக்குதல் கடந்த டிசம்பர் மாதம் நடத்தப்பட்டிருந்ததுடன் தாக்குதலில் 140 பேர் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.