வவுனியா வடக்கில் முன்பள்ளி ஆசிரியர்களாகக் கடமையாற்றுகின்ற ஆசிரியர்கள் ”தமக்கான சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரி” மகஜர் ஒன்றை இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் ஊடாக, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்துள்ளனர்.
வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்டிருந்த நிலையில், அவரை சந்தித்து குறித்த மகஜரினைக் கையளிப்பதற்கு ஆசிரியர்கள் முயற்சித்திருந்தனர்.
எனினும் பாதுகாப்பு கடமையில் இருந்த உத்தியோகத்தர்களால் ஜனாதிபதியைச் சந்திப்பதற்கு முன்பள்ளி ஆசிரியர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்தே இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் ஊடாக, குறித்த மகஜர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.