நாட்டிலுள்ள அரசியலமைப்பின் பிரகாரம் உரிய காலத்தில் ஜனாதிபதி தேர்தல்கள் நடத்தப்படவேண்டும் என மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த மக்கள் மேடை நிகழ்வில் பலர் வலியுறுத்தியிருந்தனர்.
அம்பாறை மாவட்டத்தின், மாளிகைக்காடு தனியார் விருந்தினர் நேற்று இடம்பெற்றிருந்தது. தூய்மையான அரசியலுக்காகச் செயற்படும் மார்ச் 12 இயக்கத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் கந்தையா சத்தியநாதன் தலைமையில் இந்நிகழ்வு ஆரம்பமாகியிருந்தது.
நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் திலக் ராஜபக்ஸ உட்பட உள்ளுர் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது பலதரப்பட்ட மக்கள் பல கேள்விகளை எழுப்பியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.