நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் உள்ள மக்களை அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறித்த பிரதேசங்களில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 முதல் 70 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் எனவும், கடல் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மறு அறிவித்தல் வரும் வரை கடலில் பயணம் செய்ய வேண்டாம் எனவும் மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கற்பிட்டியில் இருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரை கடற்கரைக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் அலையின் உயரம் 2.5 முதல் 3.5 மீற்றர் வரை எழலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக கற்பிட்டி, கொழும்பு, காலி தொடக்கம் மாத்தறை வரையான பகுதிகளில் கடல் அலைகள் கரையைக் கடந்து வரக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.