நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும், நீதிமன்றத்தை அவமதித்தமைக்காக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜானக ரத்நாயக்கவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் 27ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு பிரதான மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனக ரத்நாயக்கவின் தனிப்பட்ட செயலாளராக இருந்த காயத்ரி பிம்பா என்ற பெண்ணினால் தாக்கல் செய்யப்பட்ட மனு ஒன்றின் போது, உண்மைகளை கருத்திற்கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் , லஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு, பெண்கள் மற்றும் குழந்தைகள் பணியகம், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஆகியவற்றிலும் அவருக்கு எதிராகவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.