4 தேசிய விளையாட்டு சம்மேளனங்களின் பதிவுகள் உடன் அமுலாகும் வகையில் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு தீர்மானித்துள்ளது.
இலங்கை சைக்கிளோட்ட சம்மேளனம், ரக்பி சம்மேளனம், மோட்டார் வாகன விளையாட்டு சங்கம் மற்றும் வலைப்பந்தாட்ட சம்மேளனம் ஆகிய சங்கங்கள் மற்றும் சம்மேளனங்களின் பதிவுகள் இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த சங்கங்கள் மற்றும் சம்மேளனங்களின் மேலதிக பணிகள் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தின் கீழ்பட்டியலிடப்பட்டு குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவின் பணிப்புரைக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.