பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை தொடர்பிலான கலந்துரையாடலொன்று தொழில் அமைச்சில் இன்று நடைபெற்றிருந்தது.
இந்த கலந்துரையாடலுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் வடிவேல் சுரேஷ், தொழில் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டிந்த போதிலும், பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளன பிரதிநிதிகள் பிரசன்னமாகவில்லை.
மேலும் நிறுவனங்கள் வர்த்தமானி அறிவித்தலை மீறி செயற்படுகின்றமை மற்றும் கலந்துரையாடலுக்கு பிரசன்னமாகாமை குறித்து நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்படும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.