வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷை (Eric Walsh) நேற்று சந்தித்துக் கலந்துரையாடினார்.
வட மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில், கனடாவின் சர்வதேச அபிவிருத்திகளுக்கான பிரதி அமைச்சர் கிரிஸ்டோபர் மக்லணன் (Christopher MacLennan) உள்ளிட்ட குழுவினரும் கலந்து கொண்டிருந்தனர்.
நல்லிணக்கச் செயற்பாடுகள், மீள்குடியேற்றம், கண்ணிவெடி அகற்றல், காணிவிடுவிப்பு, கல்வித்துறை மேம்பாடு, தொழில் முனைவோருக்கான ஒத்துழைப்புகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இந்த விடயங்களை கேட்டறிந்த கனேடிய தூதுக்குழுவினர் வடமாகாணத்தின் அபிவிருத்திக்கு தேவையான ஒத்துழைப்புகளை பெற்றுக்கொடுக்க தாம் தயாராக உள்ளதாகத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.