மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடையை தற்காலிகமாக நீக்கி கோட்டை நீதவான் கோசல உத்தரவிட்டுள்ளார்.
இலங்கை அரசாங்கத்திற்கு சொந்தமான மத்திய வங்கி பிணைமுறிகளை வழங்கியதில் 6.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை இழந்தமை தொடர்பான வழக்கு தொடர்பில், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஜூன் 07ஆம் திகதி முதல் ஜூலை 07ஆம் திகதி வரையில் தமக்கு எதிராக விதிக்கப்பட்ட பயணத்தடையை தற்காலிகமாக நீக்குமாறு கோரி தம்மைப் பிரதிநிதித்துவப்படுத்திய சட்டத்தரணிகள் மன்றில் முன்வைத்த கோரிக்கைக்கு கோட்டை நீதவான் கோசல சேனாதிர அனுமதி வழங்கினார்.
இந்த சம்பவத்தில் அஜித் நிவார்ட் கப்ரால் சந்தேக நபராக பெயரிடப்படவில்லை என்று கூறி வெளிநாட்டு பயண தடையை முழுமையாக நீக்குமாறு அஜித் நிவார்ட் கப்ரால் சார்பில் அவரது வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இன்னிலையில் உண்மைகளை பரிசீலித்த நீதவான், அடுத்த மாதம் 5ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 5ஆம் திகதி வரையான காலப்பகுதிக்கான பயணத்தடையை நீக்கவும் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.