டெல்லியில் இன்று நடைபெறும் இண்டியா கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பதக்காக இன்று டெல்லி பயணமாகவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது
இதேவேளை தமிழகம், புதுச்சேரியில் 40 மக்களவை தொகுதிகளிலும் திமுக தலைமையிலான இண்டியா கூட்டணி வென்றது. இந்நிலையில், நேற்று மாலை 7 மணியளவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்துக்கு சென்றிருந்தனர்
அங்கு கருத்து தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்துகணிப்பு என்ற பெயரில், உளவியல் ரீதியான தாக்குதல்களை பாஜக தொடுத்தது. ஆனால்,இந்த தேர்தல் முடிவு என்பது அரசியல் சாசனத்தை மாற்றிவிடலாம், வெறுப்பு பரப்புரைகளால் மக்களை பிளவுபடுத்தலாம் என்று நினைத்த பாஜகவுக்கு எதிரான மக்களின் தீர்ப்புதான் எங்கள் கூட்டணியின் வெற்றி என தெரிவித்தார்.