நாடாளுமன்றில் இன்று, மின்சாரக் கட்டணம் மீதான விவாதம் இடம்பெற்று வருகின்றது.
இதேவேளை இன்று மாலை 05.30 மணியளவில் உத்தேச மின்சாரசபை சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இடம்பெறும் என பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அத்துடன் அரசாங்க கணக்குகளுக்கான குழு, கல்விக்கான துறைசார் மேற்பார்வைக் குழு மற்றும் சுகாதாரம் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழு என்பனவும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.