சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்தும் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக நீர் வழங்கல், வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
நீர் விநியோகத்தில் பிரச்சினைகள் இருக்குமாயின், 1939 எனும் துரித அழைப்பு இலக்கத்திற்கு அறிவிக்குமாறு சபையின் பிரதி பொது முகாமையாளர் அனோஜா களுஆரச்சி தெரிவித்தார்.
இதனிடையே, பலட்டுபான நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் நீர் விநியோகக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள சேதம் காரணமாக, மஹரகம, ஹோமாகம, கலகெதர, பாதுக்க, மாகும்புர, பெலவத்த உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்தும் குறைந்த அழுத்தத்திலேயே நீர் விநியோகிக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
நீர் மூலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளமையால், சுத்திகரிப்பு நிலையங்களுக்கான நீர் வரத்து குறைந்துள்ளதாக குறிப்பிட்ட அனோஜா களுஆரச்சி, அதன் காரணமாகவே நீர் விநியோகத்தில் தடங்கல் ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.