மேல் மாகாணத்தில் உள்ள 36 பாடசாலைகளுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) விடுமுறை வழங்கப்படுவதாக மாகாண கல்வி திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி ஹோமாகம, ஸ்ரீ ஜயவர்தனபுர, களுத்துறை, ஹொரணை, நீர்கொழும்பு உள்ளிட்ட கல்வி வலயங்களில் உள்ள 36 பாடசாலைகளுக்கு மேற்படி விடுமுறை வழங்கப்பட்டள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
அனர்த்த நிலைமை காரணமாகவே இவ்வாறு மேல் மாகாணத்தில் உள்ள 36 பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.















